அரசியல்உள்நாடு

தென் கிழக்கு பல்கலையின் உப வேந்தர் பதவிக்கு முன்மொழிந்த பெயர்களை நிராகரித்தார் ஜனாதிபதி அநுர

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பதவிக்கு முன்மொழியப்பட்ட பெயர்ப் பட்டியல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிராகரிப்பினை தனியார் இணையத்தளத்திற்கு உறுதிப்படுத்திய கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சரான பிரதமர் ஹரினி அமரசூரிய, விரைவில் புதிய விண்ணப்பம் கோருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இது தொடர்பாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளருக்கு நேற்று (29) புதன்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஓகஸ்ட் 8ஆம் திகதி முதல் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பதவி வெற்றிடமாகக் காணப்படுகின்றது.

இதற்காக வேண்டி கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் விண்ணப்பம் கோரப்பட்டு நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டது.

இதில் முதல் மூன்று இடங்களை பெற்றுக்கொண்ட பேராசிரியர்களான ரமீஸ் அபூபக்கர், ஏ.எம். றஸ்மி மற்றும் ஹன்சியா ரவூப் ஆகியோரின் பெயர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி அனுப்பப்பட்டுள்ளது.

இப்பல்கலைக்கழகத்தின் தொழிநுட்பவியல் பீடத்தின் பீடாதிபதியான கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத், பதில் உப வேந்தராக கடந்த ஐந்து மாதங்களாக செயற்படுட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-றிப்தி அலி

Related posts

பிமல் ரத்நாயக்க வெளியிட்ட விடயங்கள் தொடர்பில் முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா பதிலடி

editor

கஞ்சா ஏற்றுமதி குறித்து மற்றுமொரு தகவல் …

தனக்கு எவ்வித நியமனக் கடிதங்களும் வழங்கப்படவில்லை – ஷாபி