வகைப்படுத்தப்படாத

தென்மேற்கு துருக்கியில் நிலநடுக்கம்

(UTV|TURKEY)-துருக்கி நாட்டின் தென்மேற்கு பகுதியில் நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 8:22 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5 புள்ளிகளாக பதிவானது. முகலா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஏஜியன் கடலில் சுமார் 31 கிலோமீட்டர் தூரத்தில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இரவு நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் ஒன்றுதிரண்டனர். சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிந்து விழுந்த கட்டிடங்களில் சிக்கியவர்களை மீட்பதற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்றனர். அருகில் உள்ள நகரங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 2011-ஆம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், 600க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv 
என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

 

Related posts

இன்று முதல் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படவுள்ள அத்தியாவசிய பொருட்கள்

Twenty five year old sentenced to death over drugs

திமிங்கலங்கள் மீண்டும் ஆழ்கடலுக்கு