உலகம்

தென்கொரியாவின் முன்னாள் பிரதமருக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை

தென் கொரிய முன்னாள் பிரதமர் ஹான் டக்-சூவுக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென் கொரிய நீதிமன்றம் நேற்று (21) இந்தத் தீர்ப்பை வழங்கியது.

முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-யியோலுக்கு இராணுவச் சட்டத்தை அறிவித்து அதை செயற்படுத்த உதவியதற்காக தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அமைச்சரவைக் குழுக்கள் மூலம் இராணுவச் சட்டத்தை சட்டபூர்வமாக்குவதற்கு உதவியதற்கும், இராணுவச் சட்ட ஆவணத்தை போலியாக உருவாக்கி அழித்ததற்கும் அவர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Related posts

உக்ரைன் தாக்குதலால் ரஷ்யாவில் எண்ணெய் விலை அதிகரிப்பு

editor

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக இன்று (12) விசேட தனியார் பேருந்து சேவை

கொரோனாவைத் தொடர்ந்து கொங்கோவில் எபோலா ஆதிக்கம்