வணிகம்

தூய தங்கத்தின் விலை மாற்றம்

(UTV|COLOMBO) – வரலாற்றில் முதல் முறையாக 24 கரட் தூய தங்கத்தின் விலை 75,000 ரூபாயைத் தாண்டியுள்ள நிலையில் மக்கள் ஏக்கத்தில் உறைந்து போயுள்ளனர்.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாக அதிகரித்துச் செல்வதுடன், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியும் வீழ்ச்சி கண்டுள்ளது.

இதன் கரணமாக இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதத்தில் பவுணுக்கு 3,300 ரூபாய் அதிகரித்துள்ளது.

இலங்கை வரலாற்றில் கடந்த ஆண்டு தங்கத்தின் விலை 74,000 ரூபாய் வரை தங்கத்தின் விலை அதிகரித்தபோது இன்று அதன் விலை 75,000 ரூபாயைத் தாண்டியுள்ளது.

Related posts

2018 தேசிய உணவுக் கண்காட்சி டிசம்பர் 7-11 ஆம் திகதி வரை

சமையற்கலை உணவு எக்ஸ்போ 2018 இல் பிரகோசித்த கிரிஸ்பிறோ

நாட்டிலுள்ள சகல பொருளாதார மத்திய நிலையங்களும் திறப்பு