உள்நாடு

துஷான் குணவர்தனவுக்கு வெளிநாடு செல்ல தடை

(UTV | கொழும்பு) – நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் (CAA) முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தனவுக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

துஷான் குணவர்தன நேற்றுமுன்தினம் சனிக்கிழமை வணிக நோக்கங்களுக்காக அமெரிக்கா செல்ல முயன்றபோது, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

வெலிசர நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் தாம் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளதால் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்க முடியாது என்று குடிவரவு – குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் இதன்போது அவரிடம் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறெனினும் விமான நிலையத்தில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்ட துஷான் குணவர்தன, தன்னை ஒரு வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளதை அதிகாரிகளால் தனக்கு அறிவிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

அரசாங்கத்திற்குச் சொந்தமான லங்கா சதொச நிறுவனத்துடன் தொடர்புடைய பூண்டு மோசடி மற்றும் எரிவாயு சிலிண்டர் தொடர்பான வெடிப்பு விவகாரம் காரணமாக துஷான் குணவர்தன பிரபல்யமானவர்.

Related posts

ஜனாதிபதி – தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல்

பிரதமர் ஹரிணி ரணிலை சந்தித்ததாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது – பிரதமர் அலுவலகம்

editor

மினுவாங்கொடை – அல் அமானில் வெற்றிகரமாக நடைபெற்ற சியன ஊடக வட்டத்தின் ஊடக செயலமர்வு