உள்நாடு

துறைமுக வளாகத்திலிருந்து வாகனங்களை வெளியேற்ற நடவடிக்கை

(UTV | கொழும்பு) – ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட வாகங்களை ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்திலிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் சில நாட்களில் துறைமுக வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்கள் அகற்றப்படும் என  ஹம்பாந்தோட்டை துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனைத்து வாகன இறக்குமதியாளர்களுக்கும் துறைமுக வளாகத்திலிருந்து தாமதமின்றி வாகனங்களை அகற்றுமாறு  ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக அதிகாரிகளால் விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் குறித்த உத்தரவைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Related posts

பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பேரணி – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மீள ஆரம்பிக்கப்படும் களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கை!

திரிபோஷா தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!