சூடான செய்திகள் 1

துறைமுக நுழைவாயில் செயற்திட்டம் இன்று ஆரம்பம்

(UTVNEWS|COLOMBO)- அரசாங்கத்தின் தேசிய மூலோபாயத் திட்டத்தின் கீழான துறைமுக நுழைவாயில் நெடுஞ்சாலை செயற்திட்டம் இன்று(10) பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த நெடுஞ்சாலை இங்குறுகடே சந்திக்கு அருகில் களனிப் பாலத்துடன் இணைய இருப்பதாகவும் இலங்கையில் தூண்களால் அமைக்கப்படும் முதலாவது அதிவேக நெடுஞ்சாலை இதுவென்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் அமைக்கப்படும் இந்த வீதிக்காக 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று முதல் ஐந்தே நிமிடங்களில் பிறப்பு இறப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் வசதி

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளர் நியமனம்

“ஒரே நாளில் 200 பாடசாலை கட்டிடங்கள் ” கல்வியை மேம்படுத்துவதே அரசின் குறிக்கோள் :- அமைச்சர் ரிஷாட்!