உள்நாடு

துறைமுக நகர சட்டமூலத்தை எதிர்த்து ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பிலான விவாதம் நாடாளுமன்றில் ஆரம்பமாகிய நிலையில் குறித்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

நாடாளுமன்ற சுற்றுவட்டப்பகுதியில் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், ஹரினி அமரசூரிய, சுனில் ஹந்துநெத்தி, வசந்த சமரசிங்க உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டில் 20 மாவட்டங்களுக்கு கடுமையான மழை

ஏழரை மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய சஷீந்திர ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார்

editor

ரஞ்சனை கைது செய்யுமாறு CID இற்கு உத்தரவு