உள்நாடு

துப்பாக்கி, வாள்களுடன் பெண் கைது

வீடு ஒன்றில் இருந்து 02 கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் 02 வாள்களுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான பெண் நேற்று (22) இரவு ஹபராதுவ பொலிஸ் பிரிவின் வெல்லேகேவத்த பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண், வெல்லேகேவத்த பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டபோது, ​​வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கைத்துப்பாக்கி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கைத்துப்பாக்கி, 2 பிஸ்டல் தோட்டாக்கள் மற்றும் 2 வாள்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

Related posts

இதுவரை 823 கடற்படையினர் குணமடைந்தனர்

பொகவந்தலாவ பகுதியில் காட்டு தீ 

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜினாமா

editor