உள்நாடுபிராந்தியம்

துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர் கைது

மஸ்கெலியா, சாமிமலை கல்தோனி பகுதியில் உள்ளூர் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுக்களுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (21) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, குறித்த சந்தேக நபர் தங்கியிருந்த தற்காலிக கூடாரத்தினை சோதித்து பார்த்ததிலேயே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இங்கிரிய பகுதியைச் சேர்ந்த 44 வயதானவர் என தெரிய வருகிறது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

உயர்தரத்தில் தகவல் தொழில்நுட்பம் கற்கும் மாணவர்களுக்கும் புலைமை பரிசில்!

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பம்

100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி