உள்நாடுபிராந்தியம்

பெக்கோ சமனின் சகா ஒருவர் துப்பாக்கியுடன் கைது

தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் நெருங்கிய சகா ஒருவர் எம்பிலிபிட்டிய பகுதியில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

எம்பிலிபிட்டியவின் கங்கேயாய பகுதியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் இருந்து T-81 ரக துப்பாக்கி, 97 தோட்டாக்கள், 2 மெகசின்கள் மற்றும் ஒரு இராணுவ சீருடை ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.

மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணைகளின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

Related posts

PCR மற்றும் ANTIGEN பரிசோதனைகளுக்கு விலை நிர்ணயிப்பு

 “20ற்கு கை உயர்த்தி, மஹிந்த அணியுடன் இருந்ததால் பள்ளிவாயல்கள் பாதுகாக்கப்பட்டது” -ஹாபீஸ் நசீர் அகமட்

இன்றைய டொலரின் பெறுமதி