உள்நாடு

துப்பாக்கிச் சூட்டினால் வெலிகம பிரதேச சபைத் தலைவர் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் ‘மிதிகம லசா’ என்ற லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளார்.

அவர் இன்று (22) காலை பிரதேச சபையில் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்த போது மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள், இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், படுகாயமடைந்த அவரை பிரதேச சபை அதிகாரிகள் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.

துப்பாக்கிதாரிகள், பிரதேச சபை தலைவரிடம் கடிதம் ஒன்றில் கையொப்பம் பெறுவது போன்று பிரவேசித்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts

ஜனாதிபதி அநுரவுக்கும் அவுஸ்திரேலிய பிரதமருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள்

editor

கரையோர ரயில் அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல்