வகைப்படுத்தப்படாத

தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் அதிக விலை கொடுக்க நேரிடும் – ஐ.நா.பொதுச் செயலாளர் எச்சரிக்கை

(UDHAYAM, COLOMBO) – தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் இறுதியில் அதிக விலையை கொடுக்க நேரிடும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியா குட்டேரஸ் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு விஜயம் செய்த அவர், செய்தியாளர்களை சந்தித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.

உலகின் பல்வேறு பகுதிகளிலும் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்று வருகிறன.

அதனால் தற்போது அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.

தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் அதிக விலை கொடுக்க நேரிடும்.

ஒரு நாடு தீவிரவாதத்தை ஆதரித்தால், அது பல்வேறு இடங்களை பாதித்து பின்னர் தமது சொந்த நாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

இந்தோனேசியாவில் 6.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம்

ශ්‍රේෂ්ඨාධිකරණයෙන් ශ්‍රී ලංකා ගමනාගමන මණ්ඩලයට තහනම් නියෝගයක්

மஹிந்த, ஜப்பான் சென்றார்