சூடான செய்திகள் 1

தீர்மானம் இன்றி முடிவடைந்த சுதந்திர கட்சியின் விசேட கூட்டம்…

(UTV|COLOMBO)  வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் நாளைய தினம் எதிர்கட்சி பாராளுமன்ற  உறுப்பினர்கள் ஒன்றுக்கூடி தீர்மானம் ஒன்றை எட்டவுள்ளதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூட்டம் நாளைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

எவன்காட் வழக்கு – இடைக்கால தடை

whatsapp இல் புதிய வசதி அறிமுகம்

பாம் எண்ணெய்க்கான வரி 20 ரூபாவினால் அதிகரிப்பு