உள்நாடு

திஸ்ஸ அத்தநாயக்க MP பயணித்த ஜீப் விபத்து – மூவர் காயம்

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பயணித்த சொகுசு ஜீப் கொழும்பு ஜாவத்தை வீதியில் சலுசல பிரதேசத்துக்கு அருகில் விபத்துக்குள்ளானதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் எம்பி உட்பட மூவர் காயமடைந்தனர். பாராளுமன்ற உறுப்பினரின் ஜீப்பும் கார் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் காரின் சாரதி மற்றும் பயணி ஒருவரும் அடங்குவதாகவும்  மூவரும் நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

யாழ். மாவட்டத்தில் பொலிஸார் விசேட நடவடிக்கை!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் மரணம் – விசாரணைக்கு குழு!

editor

கலாநிதி பட்டம் தொடர்பில் விளக்கம் அளிக்க வேண்டு இல்லை என்றால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

editor