உள்நாடு

திருட்டுக் குற்றச்சாட்டில் முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் கைது!

நாரஹேன்பிட்டியில் உள்ள பிரெஞ்சு பாடசாலைக்குள் நுழைந்தது பல பொருட்களைத் திருடிய முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார. தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் அயகம பொலிஸில் பணியாற்றிய சப் இன்ஸ்பெக்டராவார்.

நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்து 136,000 ரூபா பெறுமதியான பொருட்களைத் திருடியதற்காகவும் பிரெஞ்சு பாடசாலைக்குள் நுழைந்து ரூ.1,250,000 மதிப்புள்ள சொத்துக்களைத் திருடியதற்காகவும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

Related posts

இன்றும் ஒரு மணி நேர மின்வெட்டு

இலங்கை – சர்வதேச நாணய நிதியம் பேச்சுவார்த்தை இன்றும்

பொது ஜன முன்னணியின் பிரதேச சபை உறுப்பினரின் கட்சி உறுப்புரிமை இரத்து