திருகோணமலை பிரதான சந்தைகள் மற்றும் பேருந்து நிலையப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல் திருகோணமலை பிரதான மீன் சந்தை, பிரதான காய்கறி சந்தை மற்றும் மத்திய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் தற்போது நிலவி வரும் பிரச்சினைகள் தொடர்பாக இன்று (22) விசேட கலந்துரையாடல் ஒன்று ஆளுநர் அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன பங்கேற்புடன் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில், மேற்கண்ட இடங்களில் உருவாகியுள்ள தற்போதைய சிக்கல்கள் மற்றும் அவற்றுக்கு உடனடியாகவும் நீண்டகால அடிப்படையிலும் எடுக்கப்பட வேண்டிய தீர்வு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
அனைத்து தரப்பினரின் இணக்கப்பாட்டுடன் தீர்வுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், சந்தைகளின் மேம்பாடு, அடிப்படை வசதிகளின் அபிவிருத்தி மற்றும் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவான ஆலோசனைகள் இடம்பெற்றன.
இந்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர், திருகோணமலை நகராட்சி மன்ற மேயர், முதன்மை அமைச்சின் செயலாளர், மாகாண ஆணையர், இலங்கை மீன்வளக் கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகள், நகர அபிவிருத்தி அதிகார சபையின் இயக்குநர் மற்றும் மீன் சந்தை, காய்கறி சந்தை, மத்திய பேருந்து நிலைய வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-கிண்ணியா நிருபர் ஏ. ஆர். எம். றிபாஸ்
