உள்நாடுவிசேட செய்திகள்

திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த “INS ரணா” இந்திய கப்பல்

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய கடற்படை கப்பலான ‘ஐ.என்.எஸ். ரணா’ நேற்று (12) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.

147 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பலில் முன்னூறு பேர், உள்ளனர்.கப்பலின் கட்டளை அதிகாரியாக கேப்டன் கே.பீ. ஸ்ரீசன் பணியாற்றுகிறார்.

கடற்படைகளுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கில் இந்த கப்பல் பயணத்தை ஆரம்பித்துள் ளது.

இலங்கை கடற் படையினர் ஏற்பாடு செய்துள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் இந்திய கடற்படை வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

அத்துடன் தீவிலுள்ள பல சுவாரஸ்யமான இடங்களையும் இந்திய கடற்படையினர் பார்வையிடவுள்ளனர்.

மேலும் இலங்கை இராணுவத்தினருக்கா ன ஒரு யோகா நிகழ்ச்சியை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, திருகோணமலையிலுள்ள சிறப்பு படகுப் படைத் தலைமையகத்திலும் பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (14) இக்கப்பல் நாடு திரும்பவுள்ளது.

Related posts

வெகுசன ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்க நடவடிக்கை

அம்பாறை கல்ஓயா கரை உடைப்பெடுப்பு

editor

எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை

editor