சூடான செய்திகள் 1

திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் அதி உயர் பாதுகாப்பு

(UTV|COLOMBO)-திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் மகாவலி கங்கை பகுதியில், அதி உயர் பாதுகாப்பு வலையம் எனவும் அதில் மணல் அகழ்வு பணிகளை மேற்கொள்ள தடை செய்யப்பட்டுள்ளதாகவும் புவியியல் மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அசேல இத்தவல இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த பகுதியில், சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுடிருந்த போது, கடற்படையினரின் சுற்றிவளைப்பிலிருந்து தப்பிக்க முயற்சித்து, மகாவலி கங்கையில் பாய்ந்து காணாமல்போன இரண்டாவது இளைஞனின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

திருகோணமலை – கிண்ணியா – கண்டல்காடு பிரதேசத்தில் நேற்றுமுந்தினம் இடம்பெற்ற பதற்ற நிலைமையை அடுத்து, நேற்றும் அங்கு விசேட காவற்துறை அதிரடிப்படைப் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

ரணில் – சஜித் நாளை கலந்துரையாடல்

பாராளுமன்றம் சற்று முன்னர் கூடியது…

பொது இடங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 20,000 படையினரை சேவையில் அமர்த்துவதற்குத் தீர்மானம்