உள்நாடுபிராந்தியம்

திருகோணமலை கடற்கரையில் கரை ஒதுங்கிய விண்வெளி மர்மப் பொருள்

திருகோணமலை, சம்பூர் – மலைமுந்தல் கடற்பரப்பில் நேற்று (28) மாலை, இந்தியாவிற்குச் சொந்தமானதாகக் கருதப்படும் ரொக்கட்டின் ஒரு பாகம் கரை ஒதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில நாட்களாக கடலில் மிதந்து வந்த இந்த பாரிய சிதைவு, நேற்று மாலை சம்பூர் கடற்கரையில் தரைதட்டியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த பொதுமக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
தகவலறிந்த கடற்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

தற்போது அந்தப் பகுதியில் கடற்படை வீரர்கள் பாதுகாப்பு வழங்கி வருவதுடன், பொதுமக்கள் அப்பகுதிக்குச் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சிதைவு, விண்வெளிக்கு ரொக்கட் ஏவப்படும் போது பாரத்தை குறைப்பதற்காக கழற்றப்படும் “ஃபேரிங்” அல்லது எரிபொருள் தாங்கியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

-மூதூர் நிருபர் முஹம்மது ஜிப்ரான்

Related posts

உணவு பொருட்களின் விலை நாளை குறைக்கப்படும்

ஒரே கூரையின் கீழ் அனைத்து இனப் பிள்ளைகளும் படிக்கும் வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் – மனோ கணேசன் எம்.பி | வீடியோ

editor

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor