சூடான செய்திகள் 1

திருகோணமலையில் மணல் அகழ்வு அனுமதிப் பத்திரங்கள் இடைநிறுத்தம்

(UTV|COLOMBO) திருகோணமலை மாவட்டத்திற்கான மணல் அகழ்வு அனுமதிப்பத்திரம் நாளையுடன் (15) தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியக அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, திருகோணமலை மாவட்டத்தின் அனைத்து மணற் அனுமதிப் பத்திரங்களும் நாளை முதல் இம்மாதம் 28ம் திகதி வரையில் தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியக அத்தியட்சகர் சீ.எச்.ஈ.ஆரி சிறிவர்த்தன தெரிவித்திருந்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் மணல் அகழ்வில் எழுந்துள்ள சர்ச்சைக்குரிய நிலைமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

 

 

 

 

Related posts

பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள காவற்துறையினர்…

அமல் பெரேரா உள்ளிட்ட 6 பேரிடம் விசராணை

பணப் பயன்பாட்டை கட்டுப்படுத்த சரியான சட்ட திட்டங்கள் இல்லை