வகைப்படுத்தப்படாத

திருகோணமலையில் பாரவூர்தியொன்று விபத்து – இருவர் காயம்

(UDHAYAM, COLOMBO) – திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டிவீதி – 5 மைல்கல் பிரதேசத்தில் பொருட்கள் ஏற்றிவந்த பாரவூர்தியொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

குறித்த பாரவூர்தி மின்கம்பத்தில் மோதியதில் அதில் பயணம் செய்த இருவரும் காயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

செய்தியாளர் A.M. கீத் திருகோணமலை

Related posts

தெற்கு அதிவேக வீதியில் போக்குவரத்து பாதிப்பு

Navy apprehends 4 persons with Kerala cannabis in Southern seas [VIDEO]

கொழும்பில் அதிக மழை