உள்நாடுவிசேட செய்திகள்

திருகோணமலையில் நிலநடுக்கம்

திருகோணமலை கடற்பரப்பில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

திருகோணமலையில் இருந்து வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (18) மாலை 4:06 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிறுவப்பட்ட நான்கு நிலநடுக்க வரைபடங்களாலும் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் வரைபடங்கள் மஹகனதராவ, ஹக்மான, பல்லேகல மற்றும் புத்தங்கல ஆகிய பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன.

Related posts

யுக்திய சுற்றிவளைப்பில் வெளியான பெறுபேறுகள்!

தெற்காசியாவின் பழமையான மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

சமன் லால் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல்