வகைப்படுத்தப்படாத

திரிபோஷா எடுத்து வருவதாக கூறி சென்ற இளம் பெண்! வீடு திரும்பவில்லை

(UDHAYAM, COLOMBO) – லக்ஷபான நீர் வீழ்ச்சியில் காணாமல் போனதாக சந்தேகிக்கும் பெண் ஒருவரை தேடி காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பெண்ணுடன் இருந்த 2 வயது குழந்தை ஒன்று இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

திரிபோஷா எடுத்து வருவதாக கூறி சென்றுள்ள குறித்த பெண் மீண்டும் வீடு திரும்பாமை காரணமாக, நேற்று இரவு குடும்ப உறுப்பினர் ஒருவர் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கமைய மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளின் போது நீர் தேக்கத்தின் அருகாமையில் இருந்துஆடைகள் சில மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையிலே அந்த பிரதேசங்களில் காவற்துறை தேடுதல் பணிகளை மேற்கொண்டுள்ளது.

இதன்போதே குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

26 வயதுடைய குறித்த பெண் தனது குழந்தையுடன் நீர் வீழ்ச்சியில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளதாக காவற்துறை சந்தேகித்துள்ளது.

குறித்த இளம் பெண்ணின் கணவர் கொழும்பில் தொழில் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப தகராறு ஒன்றின் காரணமாகவே இளம் பெண் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளதாக காவற்துறை சந்கேம் வெளியிட்டுள்ளது.

Related posts

Arjun Aloysius and others granted bail by special high court

கடும் பனிப்புயலினால் 1600 விமானங்கள் ரத்து

உக்ரைன் ஜனாதிபதியின் இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல்