உள்நாடு

திடீரென தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்

காலி மாத்தறை பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று காலி நகரில் இன்று (29) மாலை தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்துள்ளதுடன், சமிக்ஞை விளக்கிற்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய போது மோட்டார் சைக்கிளில் திடீரென தீப்பற்றியுள்ளது.

இந்நிலையில், காலி மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர் சென்று தீயை அணைத்துள்ளனர்.

எனினும் மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமானது.

Related posts

நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் பற்றாக்குறை – கோவிட் புதிய திரிபும் பரவி வருகிறது – அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் இல்லை – சஜித் பிரேமதாச

editor

பாராளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ள ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல்

அங்கொட லொக்காவின் மரணம் தொடர்பில் உண்மை வெளியானது