உள்நாடு

திடீரென அதிகரித்த மரக்கறிகளின் விலைகள்

நாட்டின் பல பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலைகள் திடீரென அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நுவரெலியா மத்திய சந்தையிலும் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்களிலும் ஒரு கிலோகிராம் போஞ்சியின் மொத்த விற்பனை விலை 650 முதல் 750 ரூபா வரையிலும் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாயின் விற்பனை விலை 1,200 முதல் 1,300 ரூபா வரையிலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்வதை தவிர்த்து வருவதாக மரக்கறி வியாபாரிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Related posts

ஜனாதிபதியின் முக்கிய உரை – தமிழில்

தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரசியல் அமைச்சரவை நியமனம்!

முதலாம் தவணைப் பரீட்சைகள் நடத்தப்பட மாட்டாது