உள்நாடு

திங்கட்கிழமை அதிக வெப்பம்- வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் பல பிரதேசங்களில் திங்கட்கிழமை (04) வெப்ப நிலையானது கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு உயரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு, சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் அநுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் கவனத்துக்குரிய அளவில் இருக்கும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, முடிந்தவரை நிழலான  இடங்களில் ஓய்வெடுப்பது, கடுமையான வெளிப்புறச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது போன்ற சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Related posts

கிளிநொச்சியில் ஒரு கோடி 32 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட தகவல்

editor

இடைக்கால அரசிலும் மஹிந்தவே பிரதமர் : PAFFREL கண்டனம்