உலகம்

தாய்லாந்து – கம்போடியா இடையே மோதல் – 9 பேர் பலி!

தாய்லாந்து மீது கம்போடியா நடத்திய ராக்கெட் மற்றும் பீரங்கித் தாக்குதலில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

குழந்தைகள் உட்பட குறைந்தது 14 பேர் காயமடைந்துள்ளனர்.

எமரால்டு முக்கோணப் பிராந்தியத்தில் புதிதாக வன்முறை வெடித்ததற்கு இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டுகின்றன.

தாய்லாந்தின் சூரினில் உள்ள காப் சோயெங் மாவட்டத்தில் 2 பி.எம்-21 ராக்கெட்டுகளால் கம்போடியா தாக்கியதாக தாய்லாந்து ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.

ஆனால், தாய்லாந்துதான் அமைதி ஒப்பந்தத்தை மீறி கம்போடியா மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறியுள்ளது.

மோதல் தீவிரமடைந்ததால் 6 எஃப்-16 போர் விமானங்களை தாய்லாந்தின் ராணுவம் எல்லைப் பகுதிக்கு அனுப்பியுள்ளது.

Related posts

இராணுவ தொலைக்காட்சி வலையமைப்பு அலைவரிசைகளை நீக்கியது யூடியூப்

ஹஜ் விவகாரம் : சவூதிக்கு நன்றி கூறிய இலங்கை!

ஈரான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க விமானங்கள் பறக்கத் தடை