உள்நாடுபிராந்தியம்

தாயின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி மகளை கடத்திய காதலன் கைது

கேகாலை, தெரணியகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து துப்பாக்கியை காண்பித்து மிரட்டி யுவதியை கடத்திச் சென்றதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் துப்பாக்கிகளுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரணியகல பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கேகாலை, தெஹியோவிட்ட மற்றும் கதன்கம ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 17 மற்றும் 19 வயதுடையவர்கள் ஆவர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடத்திச் செல்லப்பட்ட யுவதி கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவருடன் நீண்ட காலமாக காதல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனை அறிந்து கொண்ட தாயார், யுவதியை சில நாட்களுக்கு உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளார்.

பின்னர் இந்த யுவதி கடந்த 12 ஆம் திகதி, தனது தாயாரின் வீட்டிற்கு மீண்டும் சென்றிருந்தபோது,

சந்தேகநபர்கள் இருவரும் யுவதியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாயின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி யுவதியை கடத்திச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, கடத்திச் செல்லப்பட்ட யுவதியின் தாயார் இது தொடர்பில் தெரணியகல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெரணியகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில்

மூடப்பட்ட கட்டுநாயக்க NEXT ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்களை சந்தித்த பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

editor

ஐந்து கிராமங்கள் தனிமைப்படுத்தலில் – புகையிரத திணைக்களத்தின் அறிவிப்பு