உள்நாடு

தானிஸ் அலிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

(UTV | கொழும்பு) – கடந்த 13ஆம் திகதி ரூபவாஹினி ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஒளிபரப்புக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட தானிஸ் அலி ஆகஸ்ட் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புறப்படுவதற்கு தயாராக இருந்த விமானத்தில் இருந்து, கடந்த 26ஆம் திகதி மாலை அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது இன்று வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மாலைத்தீவில் கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர்

கற்பிட்டி முகத்துவாரம் பகுதியில் பெருந்தொகையான போதை மாத்திரைகள் மீட்பு

editor

கலைப் பிரிவு படித்தவர்களும் இனி தாதியர் – ஜனாதிபதி திட்டம்