உலகம்

தாக்குதலுக்கு மத்தியில், ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் ஈரானை தொடர்ந்து தாக்கிவரும் நிலையில் வடக்கு ஈரானில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், உயிரிழப்புக்கள் ஏதுவும் ஏற்படவில்லை என ஈரானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் செம்னான் நகரிலிருந்து தென்மேற்கே சுமார் 37 கிலோமீட்டர் (23 மைல்) தொலைவில் 10 கிலோமீட்டர் (ஆறு மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

மேலும், “செம்னான் மாகாணத்தில் உள்ள சோர்கே நகரைச் சுற்றியுள்ள பகுதியை அது உலுக்கியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோர்கேவிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் (90 மைல்) தொலைவில் உள்ள தலைநகர் தெஹ்ரானிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக ஈரானிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

Related posts

மியன்மாரில் ஒரே நாளில்  114 பேர் சுட்டுக் கொலை

‘டெல்டா’ வை மடக்கும் ஸ்புட்னிக் வி

ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!