உள்நாடு

தற்போதைய புகையிரத நேர அட்டவணையில் வாராந்தம் மாற்றம்

(UTV |கொவிட் 19) – தற்போதைய புகையிரத நேர அட்டவணையில் வாராந்தம் மாற்றம் ஏற்படுத்தவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான வார நாட்களில் ரயில்களில் பயணிக்க கூடிய அரச மற்றும் தனியார் சேவையாளர்கள் தொடர்பான தகவல்களை உடனடியாக வழங்குமாறு ரயில்வே பிரதி பொது முகாமையாளர் டீ.எச் பொல்வத்தகே நிறுவன பிரதானிகளிடம் கோரியுள்ளார்.

அந்த தரவுகளை அடிப்படையாக கொண்டு எதிர்வரும் வாரத்திற்கான புகையிரத போக்குவரத்தை மேற்கொள்ளவுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் டீ.எச் பொல்வத்தகே மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

‘இந்து சமுத்திரத்தின் வல்லரசுகளுக்கு இடையிலான மோதல்களில் இலங்கை ஈடுபடாது’

கோதுமை மாவின் விலை உயர்வு – பேக்கரி சங்கம்

புகையிரதத்தில் மோதுண்ட நபர் ஸ்தலத்தில் பலி!