உள்நாடு

தற்போதைய நிலையில் பொதுத் தேர்தலை நடத்துவது சிறந்த செயற்பாடாக அமையாது

(UTV| கொழும்பு) – நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையில் பொதுத் தேர்தலை நடத்துவது சிறந்த செயற்பாடாக அமையாது என கொழும்பு பேராயர் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்திருந்தார்.

கொழும்பு பொரள்ளையில் உள்ள பேராயர் இல்லத்தில் இன்று(16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கொரோனா அச்சுறுத்தலில் இருந்து முதலில் நாடு விடுதலை அடையட்டும் என கூறிய அவர், அதன் பின்னர் தேர்தலை நடத்துவது குறித்து தீர்மானிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அதுவரை அரசாங்கம் பொறுமையோடு இருக்க வேண்டும் எனவும் பேராயர் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

எனக்கான ஆதரவு அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை – பாரத் அருள்சாமி

editor

வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள்

editor

தயாசிறிக்கு எதிராக CEYPETCO சட்ட நடவடிக்கை