அரசியல்உள்நாடு

தற்போதைய அரசியல் நிலைமை மிகவும் கவலை அளிக்கிறது – நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இல்லை – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவிடம் ஊடகவியலாளர்கள் இன்று (20) பல கேள்விகளை கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த முன்னாள் ஜனாதிபதி, ”தற்போதைய அரசியல் நிலைமை மிகவும் கவலை அளிக்கிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இல்லை.

நீங்கள் என்னிடம் கேட்பதை விட, வீதியில் செல்பவர்கள், பஸ் தரிப்பிடத்தில் உள்ளவர்களிடம் கேட்டுப்பார்த்தால் தெரியும்.

நான் அரசியல்வாதி என்பதால், நான் சொல்வது பக்கசார்பாக அமையலாம். அதனால் சாதாரண மக்களிடம் கேட்டுப்பாருங்கள் தற்போதைய அரசாங்கத்தை பற்றி” என தெரிவித்தார்.

மேலும், ”நான் 35 வருடங்கள் பாராளுமன்றில் இருந்திருக்கிறேன். தற்போதைய அரசாங்கத்திற்கும் பாராளுமன்றத்தில் அதிக அதிகாரம் இருப்பதால், எதிர்க்கட்சி நிட்சயமாக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடையும்.

ஆனால் ஒரு விவாதத்தை நடத்துவதன் மூலம் இதன் உண்மை தன்மையை ஆராயலாம்”.

இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கேவுடன் மட்டுமல்லாமல், வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளில் தான் ஈடுபட்டதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா கருத்து தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டிற்கு மேலும் 182,400 பைஸர் தடுப்பூசிகள்

நாளை குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உயிரியல் பூங்காக்கள் இலவசம்

மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor