அரசியல்உள்நாடு

தற்போதைய அனர்த்த நிலைமையை கருத்தில் கொண்டு பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு

தற்போதைய அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, நாளையும் (28) நாளை மறுதினமும் (29) பாராளுமன்றத்தில் நடைபெறவிருந்த வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதத்தை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (27) நண்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, பாராளுமன்றம் அடுத்த திங்கட்கிழமை மீண்டும் கூடவுள்ளதுடன், திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களிலும் பாராளுமன்றத்தை இரவு வரை நடத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் அன்றைய தினத்துக்கு ஒதுக்கப்பட்ட விவாதம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

அதைத் தொடர்ந்து, மாலை 6 மணி முதல் இரவு வரை நாளை மற்றும் நாளை மறுதினம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த விவாதம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மூடப்பட்ட “சதோச” கிளைகளை மீண்டும் திறவுங்கள் – அஷ்ரப் தாஹிர் எம்.பி வேண்டுகோள்.

editor

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

தீர்வு வழங்காவிட்டால் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு செல்வோம் – தபால் தொழிற்சங்கங்கள்

editor