வகைப்படுத்தப்படாத

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் மீன்பிடியை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் பொருளாதார நெருக்கடி

(UTV|BATTICALO)-மட்டக்களப்பு மாவட்டத்திலும் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் மீன்பிடி நடவடிக்கையினை தவிர்த்துக்கொள்ளுமாறு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்தசில நாட்களாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

இதனால் சுமார் 25 ஆயிரம் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடல் சீற்றமாகக் காணப்படுவதனால் மீன்பிடி வள்ளங்கள் மற்றும் வலைகளும் பாதுகாப்பான இடங்களில் தரிக்கச்செய்யப்பட்டுள்ளன.

அதேவேளை வாவியிலும் அதிக நீரோட்டம் காணப்படுவதனால் மீன் பிடிக்கச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.
காலநிலை மாற்றம் ஏற்பட்டதையடுத்து நன்னீர் மீன்களுக்கு அதிக கிராக்கி காணப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மழை பெய்துவருகிறது.
இதனால் மீன்பிடியை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்த படியாக மீன்பிடித்தொழில் கருதப்படுகிறது.

 

எம்ஜிஏ நாஸர்

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

ධවලමන්දිරයටත් ගංවතුර

රජයේ ආයතනවල වියදම් අවම කරන ලෙස චක්‍රලේඛයක් නිකුත් වේ

How to get UAE tourist visa fee waiver for kids