அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | தற்சமயம் நிதி மோசடிகள் சமூகத்தில் பெரும் தொற்றுநோயாக மாறியுள்ளன – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

ரெயின்போ மற்றும் நியூ ரெயின்போ ஆகிய இரண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களால் 640 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து சுமார் 86-90 கோடி ரூபாக்கள் மோசடி நடந்துள்ளன. இந்த மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவிகளை நாம் வழங்கி வருகிறோம்.

இவர்களின் உரிமைகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தி முன்நிற்கும். அவ்வாறே இந்த பிரச்சினையை மீண்டும் பாராளுமன்றத்தில் முன்வைப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ரெயின்போ மற்றும் நியூ ரெயின்போ வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட தரப்பினர் அமைதிவழியிலான ஆர்ப்பாட்டமொன்றை இன்று (20) காலை நுகேகொடை கங்கோடவில நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் முன்னெடுத்திருந்தனர்.

இதில் கலந்து கொண்டு அவர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இதனுடன் தொடர்புடைய வழக்கு நடவடிக்கையும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

அவ்வாறே, இதில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உதவும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் குழுவினரும் இந்த வழக்கில் ஆஜாராகியுள்ளனர்.

இந்த மோசடி தொடர்பாக இதுவரை ஒருவர் மாத்திரமே கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதனோடு தொடர்புடைய மேலும் பலர் காணப்படுகின்றனர். இவர்களையும் கைது செய்யுமாறு நாம் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.

இதுபோன்ற மோசடி மிக்க நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் நடக்கும் மோசடிகளைத் தடுப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைளையும் எடுப்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

நீதி மற்றும் நியாயத்தை நிலைநாட்ட எந்த சந்தர்ப்பத்திலும் நான் முன்நிற்பேன். இது பெரும் சமூகப் பிரச்சினைகளில் ஒன்றாக காணப்படுகின்றது.

மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அவர்களிடமிருந்து கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக முறையான சட்ட ஏற்பாடுகளை உருவாக்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட இந்த தரப்புக்கு இன்று இலவச சட்ட உதவியை ஐக்கிய மக்கள் சக்தியே பெற்றுக் கொடுக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

வீடியோ

Related posts

ஊழியர்கள் ஓய்வு- 11 ரயில்சேவை ரத்து

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை கண்காணிக்க இராணுவத்தினர்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்