வகைப்படுத்தப்படாத

தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 50 பேர் பலி

(UTV|AFGHANISTAN)-ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக மதத் தலைவர்கள் கூடியிருந்தபோது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மேலும் குறைந்தது 83 பேர் காயமடைந்துள்ளனர்.

இது, அண்மைய மாதங்களில் காபூலில் நடத்தப்பட்ட மோசமான தாக்குதல்களில் ஒன்றாகும்.

ஆனால், குறித்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

ஆனால் அண்மைக் காலத்தில், ஐ.எஸ். மற்றும் தலிபான் அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், இந்தத் தாக்குதலை தாம் நடத்தவில்லை என தலிபான் அமைப்பு மறுத்துள்ளது.

 

 

 

 

Related posts

බිමත් රියදුරන් 219 දෙනෙකු අත්අඩංගුවට

New Jaffna Commander assumes duties

பாடசாலையில் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 பேர் பலி