உள்நாடு

தரங்குறைந்த 34 ஆயிரம் முகக் கவசங்கள் மீட்பு

(UTV|கொழும்பு) – இந்தியா மற்றும் சீனாவில் இருந்து இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 34 ஆயிரம் தரங்குறைந்த முகக் கவசங்கள் பாவனையாளர் அதிகார சபையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்தியாவில் இருந்து இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 20 ஆயிரம் தரங்குறைந்த முகக் கவசங்கள் நேற்றைய தினம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

குறித்த முகக் கவசங்கள் புறக்கோட்டையில் விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று பிற்பகல் பாவனையாளர் சேவை அதிகார சபையினால் பறிமுதல் செய்யப்பட்டன.

Related posts

ஆணைவிழுந்தான் – சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு

வாகன இறக்குமதி தொடர்பில் நிதியமைச்சின் எதிர்வுகூறல்!

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் பலி

editor