உள்நாடுபிராந்தியம்

தம்பியை வெட்டிக் கொலை செய்த அண்ணன்!

ஜா-எல பொலிஸ் பிரிவின் ஏக்கல பகுதியில் நேற்று (01) ஒருவர் ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

பணத் தகராறு தொடர்பாக இரண்டு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததாகவும், இதன் விளைவாக மூத்த சகோதரர் கூர்மையான ஆயுதத்தால் தம்பியைத் தாக்கிக் கொலை செய்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்தவர் ஏக்கல, சென்ற் மத்யூ மாவத்தையைச் சேர்ந்த 24 வயது இளைஞராவார்

ஏக்கலவைச் சேர்ந்த 35 வயதுடைய அவரது சகோதரர் கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

பசில் ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்

குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூ.27

ஜனாதிபதியுடனான சந்திப்பை தவிர்த்த மனோ – காரணம் வெளியானது