சூடான செய்திகள் 1

தமிழ், சிங்கள புதுவருடத்திற்கான பஞ்சாங்கம் நாளை ஜனாதிபதியிடம் கையளிப்பு…

(UTV|COLOMBO) தமிழ், சிங்கள புதுவருடத்திற்கான பஞ்சாங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நாளை முற்பல் இடம்பெறவுள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாச அதனை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளார்.

புதுவருட காலத்தில் நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் மற்றும் தனியார் வர்த்தக நிலையங்கள் தற்போது தயாராகியுள்ளன.

மேலும் புதுவருடத்திற்காக ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக விசேட பஸ் மற்றும் புகையிரத சேவைகள் எதிர்வரும் 8ஆம் திகதியில் இருந்து ஆரம்பமாகும்.

புதுவருடத்தில் பிரதான பாதையிலும், களனிவெலி புகையிரத பாதையிலும் மேலதிக புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என புகையிரத பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Related posts

இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது புகையிரத பணிப்புறக்கணிப்பு

அஞ்சல் பணியாளர்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை

தற்போதைய அரசுக்கு எதிராக, ஐ.தே.கட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு தயார்