வகைப்படுத்தப்படாத

தமிழ் ஊடகவியலாளர் கொல்லப்பட்டமை குறித்து ஏன் விசாரணைகள் முன்னெடுக்கபடுவதில்லை?

(UDHAYAM, COLOMBO) – தமிழ் ஊடகவியலாளர் கொல்லப்பட்டமை குறித்து ஏன் விசாரணைகள் முன்னெடுக்கபடுவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தின்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊடகவியலாளர்களான பிரதீப் ஹெக்நெலிகொட மற்றும் லசந்த விக்கிரமதுங்க விவகாரம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும்போது, தமிழ் ஊடகவியலாளர்கள் கொலைகள் குறித்த விசாரணைகள் ஏன் மேற்கொள்ளப்படுவதில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேநேரம், அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய விடயங்களை நிறைவேற்றாததன் காரணமாகவே, சர்வதேசத்தின் தலையீடு உருவானது.

இதன் அடிப்படையில் ஊருவான ஜெனீவா பிரேரணையை அமுலாக்காமல் அரசாங்கம் பாசாங்க செய்ய முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

குத்தகை நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் அடித்து கொலை

Sirisena and Madurangi to lead SL at Commonwealth TT Championship

தைவான் பாராளுமன்றம் ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை அங்கீகரித்துள்ளது