ஜனாதிபதியின் பொது மன்னிப்பை கோரியுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிப்பார் என்றும் அதற்கு சாதகமான தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகளில் சுமார் 15 பேர் ஜனாதிபதி பொதுமன்னிப்பு தொடர்பில் கோரிக்கை ஆண்டு காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்க கவனம் செலுத்தப்படுவதாக நீதியமைச்சர் சபையில் குறிப்பிடுவது வரவேற்கத்தக்கது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கதிர்காமத்தம்பி சிவகுமார், விக்னேஸ்வரநாதன் பார்த்திபன், கிருஷ்ணசாமி ராமச்சந்திரன், சண்முகலிங்கம் சூரியகுமார், ஜோன்ஷன் கொலின் லெவன்டினோ, சச்சிதானந்தம் ஆனந்த சுதாகர், ஏ.எச். உமர் காதர், தங்கவேலு விமலன், செல்வராஜா கிருபாகரன், தம்பியையா பிரகாஷ் ஆகியோர் 30 ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.