உள்நாடு

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணியின் புதிய நிர்வாகத்தெரிவு!

(UTV | கொழும்பு) –

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணியின் புதிய நிர்வாகத்தெரிவு  இன்றைய தினம் இடம்பெற்றது.
தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணி புதிய நிர்வாகத்தெரிவு இன்றைய தினம் இடம்பெற்றது.கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

இவ் நிர்வாகத் தெரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் வேழமாலிதன், வடக்கு மாகாண முன்னால் கல்வி அமைச்சர் குருகுலராஜா உள்ளிட்ட 100க்கு மேற்ப்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர்.இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிறிதரன் குறிப்பிடுகையில், ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தாம் ஜனாதிபதியாக வருவதற்காக 13ம் திருத்தச்சட்டத்தினை கொண்டு வருவது போன்று மாயை தோற்றத்தை ஏற்படுத்துகின்றார் எனவும், அவர் அரசியல் தீர்வை பெற்றுத்தரமாட்டார் எனவும் மக்களை குழப்பத்தில் வைத்திருப்பார் எனவும் தெரிவித்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

குணமடைந்தோர் எண்ணிக்கை 105 ஆக அதிகரிப்பு

மலேசியாவின் பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து !

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று- வெல்லப்போவது யார்?