அரசியல்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த செந்தில் தொண்டமான்

அயலக தமிழர் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (12) சென்னையில் இடம்பெற்ற நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.

இக்கலந்துரையாடலின் போது, இலங்கை வாழ் தமிழர்களின் வளர்ச்சி குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், கடந்த காலங்களில் இலங்கை மக்களுக்கு தமிழக முதலமைச்சர் செய்த உதவிகளை நினைவுகூர்ந்தார்.

மேலும் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு செந்தில் தொண்டமான் பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Related posts

எமது வாய்களை மூட வர வேண்டாம் – மின் துண்டிப்பு தொடர்பில் விளக்கம் அளிக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

editor

போலியாக கைது செய்து, விளக்கமறியலில் வைத்தால் வழக்குத் தாக்கல் செய்வோம் – உதய கம்மன்பில

editor

ரணிலுடன் கூட்டு இல்லை – பொதுத்தேர்தலில் நானே பிரதமர் வேட்பாளர் – சஜித்

editor