வகைப்படுத்தப்படாத

தமக்கு எதிராக எந்த விசாரணையும் இடம்பெறவில்லை – ட்ரம்ப்

(UDHAYAM, COLOMBO) – தமக்கு எதிராக எந்த விசாரணையும் இடம்பெறவில்லை என்று அமெரிக்கவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கும் அவருக்கும் இடையில் ரகசிய தொடர்புகள் இருப்பதாகவும், ரஷ்யாவின் உதவியுடனேயே அவர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இது தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்தியதன் காரணமாகவே எப்.பி.ஐயின் பணிப்பாளர் ஜேம்ஸ் கோமே பதவி நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எனினும் தமக்கு எதிராக அவ்வாறான எந்த விசாரணையும் இடம்பெறவில்லை என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், ட்ரம்ப் – ரஷ்ய தொடர்பு குறித்த விசாரணை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று, எப்.பி.ஐக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பணிப்பாளர் அன்றுவ் மெக்காபே, செனட் குழுவிடம் தெரிவித்துள்ளார்.

Related posts

Daniel Craig returns to “Bond 25” set in UK

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

212 Drunk drivers arrested within 24-hours