உள்நாடு

தப்பிச் சென்ற கைதி ஹெரோயினுடன் கைது

(UTVNEWS | COLOMBO) – வெளிக்கடை சிறைச்சாலையில் இருந்து தப்பிச்சென்ற கைதி நுகேகொடை பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோட்டாவ மகும்புர பகுதியில் வைத்து நான்கு கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர், வெளிக்கடை சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதி என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்தேக நபர் 2017 ல் சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், சந்தேக நபருக்கு சொந்தமான இரண்டு கார்கள் மற்றும் ஏழு கையடக்க தொலைபேசிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை  நுகேகொட பிரிவு குற்றவியல் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஹெரோயின் கடத்தல்காரர் ஒருவருக்கு மரண தண்டனை [VIDEO]

கோப் குழு கூட்டத்தில் ரஞ்சித் பண்டாரவின் மகன் எழும் சர்ச்சை

குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டம் தோல்வி

editor