உள்நாடு

தபால் வாக்களிப்பு தொடர்பான முக்கிய தகவல்

(UTV | கொழும்பு) – தபால் வாக்களிப்பு தொடர்பான முக்கிய தகவல்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு தொடர்பான வாக்குச் சீட்டுகள் இன்று அல்லது நாளை கிடைக்கப் பெற்றால், தற்போது திட்டமிட்டபடி இம்மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்புகளை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு நாட்களுக்குள் வாக்குச் சீட்டுகள் கிடைக்கப்பெறாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை தபால் மூல வாக்களிக்கும் திகதி தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும்தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சி தொடர்வது தொடர்பாக தேசிய மக்கள் சக்தியும் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கஞ்சா ஏற்றுமதி குறித்து மற்றுமொரு தகவல் …

பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகனை அச்சுறுத்தி தங்க நகை கொள்ளை!

ருமேனியாவில் உள்ள இலங்கையர்கள் ஐவருக்கு கொரோனா