கேளிக்கை

தனுஷுடன் இணையும் ரஷ்மிகா

(UTV | சென்னை) – 2021ம் ஆண்டு வெளியான சுல்தான் திரைப்படம் மூலமாக தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகர் ரஷ்மிகா மந்தனா.

தற்போது தளபதி விஜயுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 2023ம் ஆண்டு வெளியாக உள்ளது.

இந்நிலையில் நடிகை ரஷ்மிகா, இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷுடன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஆரம்பமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ரஷ்மிகா இப்படத்தில் கதாநாயகியாக நடிப்பது தொடர்பாக படக்குழு அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குய்ப்ப்பிடத்தக்கதாகும்.

Related posts

தெலுங்கில் அறிமுகமாகும் வரலட்சுமி

கொலை வழக்கில் சிக்கினாரா பாவனா? விசாரணையில் திடுக் தகவல்கள்!

மிரட்டலாய் வந்த The Nun!- (VIDEO)