உள்நாடு

தனியார் பேருந்துகளுக்கு இ.போ.சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள்

(UTV | கொழும்பு) – பொது போக்குவரத்தில் ஈடுபடுகின்ற தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நிதியமைச்சர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இதற்கமைய கனியவள கூட்டுதாபனத்தின் விலையின் கீழ் இவ்வாறு பேருந்துகளுக்கு டீசல் வழங்கப்படவுள்ளது.

இதுதொடர்பான மதிப்பீட்டு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

Related posts

காசா தாக்குதலால்- இஸ்ரேல் உறவை துண்டித்த நாடு!!

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான HIV பரிசோதனை நிறுத்தம்

New Fortress ஒப்பந்தத்திற்கு எதிராக JVP எழுத்தாணை மனு